Monday, May 30, 2011

"கோ" என் பார்வை

இயக்குனர்கள் திரைப்படம் எடுப்பதை விட, ஒளிப்பதிவாளர்கள் திரைப்படம் எடுப்பது ஒரு ஆரோக்கியமான நிலையையே தமிழ் சினிமாவுக்கு கொண்டு வரும் என்பது என் கருத்து. எத்தனயோ இயக்குனர்கள் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைத் தந்தாலும், ஒளிப்பதிவாளர்களால் இயக்கப்பட்ட ஒருசில படங்களை என்றுமே மறக்க முடியாது. திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை என்பனவற்றை கையாள்வதில் இவர்களுக்கு நிகர் இவர்களேதான். இந்தவரிசையில் ஒளிபதிவாளர்கள் மறைந்த ஜீவா, P.C. ஸ்ரீராம், கே.வி. ஆனந்த், ராஜீவ் மேனன், தங்கர் பச்சான் ஆகியோர் சிறப்பிடம் பிடிக்கின்றனர்.இவர்களின் படைப்புகளுக்கு உதாரணமாக தாம் தூம், மின்சாரக் கனவு, அயன், பள்ளிக்கூடம் ஆகிய படங்களை குறிப்பிடலாம்.


 

 

அண்மையில் கே.வி. ஆனந்தின் இயக்கத்தில் ஹரிஸ் ஜெயராஜின் இசையுடன் உருவான "கோ" திரைப்படத்தை "சினி சிட்டியில்" நண்பர்களுடன் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. பலரது விமர்சனகளைக் கேட்ட பிறகு படம் பார்ப்பது எனக்குள்ளேயே ஒரு "கோ" வுக்கு சார்பான ஒரு கருத்தை உண்டாகிவிட்டிருக்க (stereo type), இன்னும் எதிர்பார்ப்புடன் படத்தைப் பார்த்தேன். பார்க்கப் பார்க்க ஒரு திருப்தி, ஆரம்பம் முதலே Harris Jeyaraj இசை தூக்கிவிட, சாதாரண கதாநாயகனின் வரவுடனும் (hero introduction), சரியான நேரத்தில் கதாநாயகியின் வரவுடனும் படம் ஆரம்பமாக, மனதுக்குள் தோன்றிய காற்று கைவழியே வந்து என் வாய்வழியே ஒரு விசிலாக மாறியது. முன்னோடத்திலேயே (எழுத்துக் கட்டத்தில்) கே.வி. யின் புகைப்படக் கைவண்ணம் தெளிவாகக் காட்டப்படிருந்தது. 

அழகான கதாநாயகி, நல்ல நடிப்பு (அம்மாவின் சாயல் ரொம்பவே உள்ளது...கொஞ்சம் மாற்றினால் நல்லது)...ஏனோ எனக்கு பிடித்திருந்தது (உயரம்தான் அம்மாவைப்போல). கடவுள் தான் வழியக்காட்டவேணும் எண்டு சொலுறத விட, அம்மாதான் கார்த்திகாவுக்கு வழிகாட்டவேணும்.      

யாதர்த்தத்தில் இது நடக்குமா என்று நினைக்கும் அளவிற்கு ஒரு கதை (ஆனால் கடந்த தமிழ் நாட்டு தேர்தல் முடிவுகள் இது சாத்தியமே என்று காட்டிவிட்டன). படத்தில் ஒவ்வொருவரும் தங்களது பங்கை சிறப்பாகச் செய்துள்ளார்கள் என்பதற்கு அவர்கள் எல்லோருமே சான்று. ஜீவாவைவிட எனக்கு பிடித்த பாத்திரம் வசந்தாக வரும் அஜ்மல் அமீர், மற்றும் சரோவிடம் "once more" கேட்கும் அந்த குண்டு பையனுமே. சரோவின் நடிப்பு ok. கதையில் விறுவிறுப்பு நிறையவே இருக்கிறது.  ஜீவா....... சொல்லவே வேண்டாம்...எப்போதும் போலவே சிறப்பாக அசத்தியிருகிறார். 

ஒரு சின்னக் கவலை. "கோ" படத்தில் "அயன்" படத்தின் தாக்கம் நிறையவே இருக்கிறது. ஹரிஸ் பின்னணி இசையை அழகாக அமைத்திருந்தாலும், பாடல்களில் அயனின் தாக்கம் நிறையவே இருக்கிறது. இது கவனிக்கப் படாமல் விடப்பட்டதா என்பது கேள்விக்குறி...! ஆனாலும் பாடல்கள் சுப்பர் ஹிட்.......இதற்கு கே. வி. யின் காட்சி அமைப்பும் ஒரு காரணம். ஒரு கட்டத்தில் படத்தில் எடிடராகவே வந்து போகும் படத் தொகுப்பாளர் ஆண்டனி வழமைபோல் தனது திறமையை காட்டியிருக்கிறார். ஆக மொத்தத்தில் (நான் புள்ளி (marks)போட விரும்பலைங்கோ...அதுக்கு நமக்கு தகுதியுமில்லைங்கோ)...நண்பர்கள் காட்டாயமா தியேட்டரில் "கோ" பாருங்க...


No comments:

Post a Comment